டோல்கேட்ல காசு கேட்பியா? ஊழியரை 10 கி.மீ. தூரத்துக்குத் தொங்கவிட்ட லாரி ஓட்டுநர்!!

Published : Apr 27, 2022, 10:14 PM IST
டோல்கேட்ல காசு கேட்பியா? ஊழியரை 10 கி.மீ. தூரத்துக்குத் தொங்கவிட்ட லாரி ஓட்டுநர்!!

சுருக்கம்

ஆந்திராவில் லாரி ஓட்டுநர் ஒருவர் டோல்கேட் ஊழியரை தொங்கவிட்டபடி தேசிய நெடுஞ்சாலையில் வேகமான சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆந்திராவில் லாரி ஓட்டுநர் ஒருவர் டோல்கேட் ஊழியரை தொங்கவிட்டபடி தேசிய நெடுஞ்சாலையில் வேகமான சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அதுக்குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டு, லைக் செய்யப்படுவதோடு பலரால் பகிரப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திராவில் நிகழ்ந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமக்கதாடு டோல்கேட் உள்ளது.

அந்த டோல்கேட்டிற்கு வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அந்த லாரியை நிறுத்த டோல்கேட் ஊழியர்கள் போன் செய்து தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அமக்கதாடு டோல்கேட் ஊழியர் சீனிவாசலு சம்பந்தப்பட்ட ஹரியானா லாரியை மடக்கி நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் ஓட்டுநர் முந்திச் செல்ல முயன்றதை அடுத்து டோல்கேட் ஊழியர் சீனிவாசலு லாரி பம்பர் மீது ஏறி நின்று லாரியை நிறுத்த முயன்றுள்ளார். இதை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுனர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் சீனிவாசலு பம்பர் மீது நின்ற நிலையிலேயே லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று தேசிய நெடுஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை போலீசார் வெல்துா்த்தி அருகே லாரியை தடுத்து நிறுத்தி சீனிவாசலுவை மீட்டு லாரி ஓட்டுநரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதில் லாரி ஓட்டுநர் லாரியை வேகமாக இயக்க டோல்கேட் ஊழியர் பம்பரில் தொங்கியபடி செல்கிறார். இது ஒருபுறம் அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் மறுபுறம் இது நகைச்சுவையாகவும் சிலர் பகிர்ந்து வருகின்றனர். டோல்கேட் ஊழியரை தொங்கவிட்ட லாரி ஓட்டுநர் என்று பகிர்ந்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!
பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!