ஹாப்பி நியூஸ்... 1 - 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!

Published : Apr 27, 2022, 09:19 PM IST
ஹாப்பி நியூஸ்... 1 - 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!

சுருக்கம்

புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மக்கள் புதிய இயல்பு வாழ்க்கையைப் பழகத் தொடங்கினர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியது. இதை அடுத்து மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டது.

இதனிடையே கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதித்தது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் கல்விச் சூழல் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டது. பள்ளி அளவில் ஏராளமான இடைநிற்றலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் ஆண்டுக் கணக்கில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆன்லைன் கல்வி என்பது பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு சரியாக கிடைத்தது. ஆனால், கிராமப் புற மாணவர்கள் ஆன்லைன் கல்வியை முறையாக அணுக முடியாத சூழலில் முற்றிலும் கல்வியிலிருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் ஜனவரி மாதத்துக்குப் பிறகு தான் மாணவர்கள் நேரடி வகுப்புகள் மூலம் கல்வி கற்று வருகின்றனர். எனினும் மாணவர்களுக்கு முழு பாடங்களும் நடத்தி முடிக்கப்படவில்லை. அதனால், மாணவர்கள் தேர்வுகளில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!