DRDO Autonomous Flight : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நேற்று வெள்ளிக்கிழமை கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் ஆளில்லா சிறு ரக (சித்ராதுர்கா) விமானத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
இந்த தானியங்கி ஸ்டெலத் வகை UAV-யின் வெற்றிகரமான சோதனையோட்டம், நமது பாரத நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு முறையான சான்றாகும். வால் அமைப்பு இல்லாத கட்டமைப்பில் உள்ள இந்த விமானத்தின் மூலம், இவ்வகை தொழில்நுட்பத்திற்கான கட்டுப்பாடுகளில் தேர்ச்சி பெற்ற நாடுகளின் எலைட் கிளப்பில் இந்தியா இணைந்துள்ளது.
இந்த UAV, டிஆர்டிஓவின் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மெண்ட் மூலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தின் முன்னதாக இந்த விமானத்தின் சோதனையோட்டம் கடந்த ஜூலை 2022ல் துவங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரிகளைப் பயன்படுத்தி பல்வேறு மேம்பாட்டு கட்டமைப்புகளில் ஆறு விமான சோதனைகள் இதில் நடத்தப்பட்டன.
undefined
இளமை யாருக்கும் நிரந்தரமல்ல என்பதை ஏற்க மறுக்கும் மனம்; மாமியாரை அடித்து சித்ரவதை செய்யும் மருமகள்
இந்த விமான-சோதனைகள் ஒரு வலுவான காற்றியக்கவியல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்நேர மற்றும் ஹார்ட்வேர்-இன்-லூப் உருவகப்படுத்துதல் மற்றும் அதிநவீன தரைக் கட்டுப்பாட்டு நிலையம் ஆகியவற்றின் வளர்ச்சியில் சாதனைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஏவியோனிக்ஸ் சிஸ்டம்ஸ், ஒருங்கிணைப்பு மற்றும் விமானச் செயல்பாடுகளை இறுதி கட்டமைப்பில் வெற்றிகரமான ஏழாவது விமானத்தை நோக்கி DRDO குழு மென்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
Vijay Diwas 2023: இன்று ''விஜய் திவாஸ்''! அதன் வரலாறு, முக்கியத்துவம் என்ன?
இந்த அதிவேக UAVயானது தன்னாட்சி தரையிறக்கம், தரை ரேடார்கள்/உள்கட்டுமானம்/பைலட் தேவையின்ம, என்று பல தனித்துவமான செயல்திறனைக் காட்சிப்படுத்தியது. ஜிபிஎஸ் எனப்படும் indigenous satellite-based தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த விமானம் ஜியோ ஆக்மென்டட் நேவிகேஷன் (ககன்) ரிசீவர்களைப் பயன்படுத்தி உள்நாட்டு செயற்கைக்கோள் அடிப்படையிலான ஆக்மென்டேஷன் மூலம் உள் சென்சார் தரவு இணைவைப் பயன்படுத்தி பறக்கின்றது.