அயோத்தியில் புதிய மசூதி: அடிக்கல் நாட்டும் மெக்கா இமாம்!

By Manikanda Prabu  |  First Published Dec 15, 2023, 6:37 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படவுள்ள புதிய மசூதிக்கு மெக்கா இமாம் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


அயோத்தியில் கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இங்கு 16ஆம் நூற்றாண்டு காலம் வரை ராமர் கோயில் இருந்தது. இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று இந்து அமைப்புகளும், 1528ஆம் ஆண்டு முகலாய மன்னர் பாபர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மசூதி என இஸ்லாமிய அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் எனவும், அயோத்தியில் நகருக்குள் வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க மத்திய அரசு, உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

Latest Videos

undefined

மிக்ஜாம் புயல்: ரூ.6000 நிவாரண நிதி - நாளை மறுநாள் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

இதையடுத்து, பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள தன்னிப்பூரில் புதிய மசூதி கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் புதிய மசூதி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மசூதிக்கு நபிகளின் நினைவாக முகமது பின் அப்துல்லா மசூதி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படவுள்ள புதிய மசூதிக்கு மெக்கா இமாம் இ-ஹராம் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகமது பின் அப்துல்லா மசூதியின் அடிக்கல்லை மெக்காவில் உள்ள புனித மசூதியில் தொழுகை நடத்தும் இமாம் இ-ஹராம் நாட்டுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டவுள்ள இந்த மசூதி, இந்தியாவில் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 அடி உயரம் மற்றும் 36 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய குர்ஆன் இங்கு வைக்கப்பட வாய்ப்புள்ளதாக மும்பையைச் சேர்ந்த பாஜக தலைவர் ஹாஜி அராபத் ஷேக் தெரிவித்துள்ளார். முகமது பின் அப்துல்லா மசூதியின் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!