ட்ரோன் விபத்துக்குள்ளான தகவல் பரவியதால், உள்ளூர் கிராம மக்கள் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தபஸ் வகை ட்ரோன் ஞாயிற்றுக்கிழமை காலை கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஒரு கிராமத்தின் அருகே விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியதாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
UAV - TAPAS ட்ரோன் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது என அதிகாரிகள் கூறுகின்றனர். "கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் டிஆர்டிஓ உருவாக்கிய தபஸ் ட்ரோன் சோதனை செய்துகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது" என்று பாதுகாப்பு அதிகாரிகள் சொல்கின்றனர்.
"விபத்து குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு டிஆர்டிஓ விளக்கம் அளித்து வருகிறது. மேலும் விபத்துக்குப் பின்னால் உள்ள குறிப்பிட்ட காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லடாக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: 9 வீரர்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயங்களுடன் மீட்பு
ட்ரோன் விழுந்து நொறுங்கிய இடம் விவசாய நிலமாக இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ட்ரோன் விபத்துக்குள்ளான தகவல் பரவியதால், உள்ளூர் கிராம மக்கள் UAV தபஸ் ட்ரோனைப் பார்க்க விபத்து நடந்த இடத்தில் குவிந்தனர். சேதமடைந்த ட்ரோன் மற்றும் அதன் உபகரணங்கள் மைதானத்தில் சிதறிக் கிடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
வான்வழி கண்காணிப்புக்கான பயன்படுத்தப்படும் தபஸ் பிஎச்-201 ஆளில்லா விமானம் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் ட்ரோன் ஆகும். இது முன்பு ரஸ்டம்-II என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவின் லூனா-25 தரையிறங்குவதில் சிக்கல்! விண்கலத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு!