டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மூத்த அதிகாரியாக செயல்பட்டு வரும் ஒருவர் தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்சோ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் மூத்த அதிகாரிக்கு எதிராக டெல்லி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த சிறுமையை பலாத்காரம் செய்ய உதவியதாக அந்த அதிகாரியின் மனைவி மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார் என்றும். அவர் கடந்த 2020ம் ஆண்டு அவரது தந்தையை இழந்தார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சிறுமியின் தந்தை இறந்தபிறகு குற்றம் சாட்டப்பட்டவர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில் அவர் பல முறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பமானபோது, குற்றம் சாட்டப்பட்டவர், அதை தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். அந்த அதிகாரியின் மனைவி, அவர்களது மகனிடம் சொல்லி சில மருந்துகளை வாங்க வைத்து, வீட்டிலேயே அந்த சிறுமியின் கர்பத்தை கலைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது .
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது சிகிச்சையில் உள்ளார் எண்டுறம், மேலும் அவரது வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட உள்ளது என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குழந்தை மற்றும் மகளீர் நலவாரிய அதிகாரி ஒருவரே இப்படிப்பட்ட கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Aadhaar : ஆதார் அட்டையை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி.? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!