நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு... பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி!!

By Narendran S  |  First Published Jul 21, 2022, 7:55 PM IST

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவரானார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு.


குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவரானார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு. நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. முன்னதாக எம்.பி.க்கள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததது. அதன்படி, எம்.பிக்கள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மொத்தம் 748 எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகளின் மதிப்பு 5 லட்சத்து 23 ஆயிரத்து 600. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு 540 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஜனாதிபதியாகிறார் திரெளபதி முர்மு: 20ஆயிரம் லட்டு தயார்: சொந்த ஊரில் கொண்டாட்டம் ஆரம்பம்

Tap to resize

Latest Videos

இந்த வாக்குகளின் மதிப்பு, 3.78 லட்சமாகும். எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா208 வாக்குகள் பெற்றார். இதன் வாக்கு மதிப்பு 1,45,600 வாக்குகளாகும். 15 எம்.பிக்கள் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். அதை தொடர்ந்து 2 ஆம் சுற்று முடிவுகள் வெளியானது. அதிலும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்த நிலையில் மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் மொத்த வாக்குகளில் 50 சதவீதம் வாக்குகளை திரௌபதி முர்மு கடந்தார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல்: திரெளபதி முர்மு முன்னிலை: அதிக எம்பிக்கள் ஆதரவு

குடியரசுத் தலைவராக 5,28,491 மதிப்பு வாக்குகளே தேவை என்ற நிலையில் திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பு வாக்குகள் கிடைத்துள்ளது. திரௌபதி முர்முவுக்கு 2,824 வாக்குகள் கிடைத்திருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 71.7 சதவீத வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகளுடன் வெற்றிப்பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 28.3 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

click me!