
பாரதியஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜார்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மு நியமிக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி முழுமையாக ஆதரவு தெரிவித்து இருப்பதால், முர்மு வேட்பாளராக நியமிக்கப்பட சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதி முடிவடைகிறது. புதிய குடியரசு தலைவரை தேர்வு ெசய்வதற்கான தேர்தல் அறிவிக்கையை 14-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டு, அடுத்த மாதம் 17ந்தேதி தேர்தல் நடத்துகிறது, 20-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. காங்கிரஸ் தலைைமயிலான எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து ஆலோசித்து வருகின்றன.
அதேபோல் பா.ஜனதா கட்சியும் ஒரு குழு அமைத்து வேட்பாளர் தேர்வு குறித்து விவாதித்து வருகிறது. இதில் பா.ஜனதா சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு நிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ள என அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரவுபதி முர்முவைப் பற்றி சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்…
1.ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரவுபதி முர்மு கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். நாட்டின் முதல் பழங்குடியின ஆளுநர் என்றபெருமையையும் பெற்றார்.
2. ஓடிசா மாநிலம், மயூர்பாஞ்ச் மாவட்டம், உபர்பேடா கிராமத்தில் சந்தால் பழங்குடியினக் குடும்பத்தில் முர்மு பிறந்தவர். இளநிலை பட்டப்படிப்பு முடித்து, அரசுப்பணியில் கிளார்க்காக முர்மு பணிபுரிந்தார்.அதன்பின் தீவிர அரசியலுக்கு வந்தார்.
3.மயூர்பாஞ்ச் மாவட்டம், ரெய்ராகோல் தொகுதியில் 2 முறை பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக முர்மு தேர்வு செய்யப்பட்டார். 200-2004ம்ஆண்டு வரை பிஜூ ஜனதாதளம், பா.ஜனதா கூட்டணியில் பல துறைகளுக்கு அமைச்சராக முர்மு இருந்தார். 2007ம்ஆண்டு சிறந்த எம்.எல்.ஏ.வுக்கான நிசாந்தா விருதை முர்மு பெற்றார்.
4. முர்மு கணவரையும், தனது2 மகன்களையும் இழந்தவர். இவருக்கு ஒரு மகள் மட்டுமே உயிரோடு இருக்கிறார்.
5. மிகவும் எளிமையானவரான முர்மு, பா.ஜனதாவின் பழங்குடியின பிரிவுக்கு பொறுப்பு ஏற்று இருந்தார்.
6.முர்முவை ஜனாதிபதியாக பா.ஜனதா நிறுத்தி வெற்றி பெறும் நிலையில், அது 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அந்த கட்சிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஓடிசா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பழங்குடியின மக்களின் வாக்குகள் எளிதாக பா.ஜனதா வசமாகும்.
7. முர்முவை பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்தும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கவே நிலைப்பாடு எடுக்கலாம். ஏனென்றால், முதன்முதலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக வருவதை எந்த கட்சியும் எதிர்க்காதுஎன நம்பலாம். ஓடிசா மாநில, பிஜூ ஜனதா தளம் கட்சியும் முர்முவை ஆதரிக்கலாம்.
8. முர்மு ஜனாதிபதியாக தேர்வு செய்யும் பட்சத்தில், ஒடிசா மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு அதிக வாய்ப்பு ஏற்படும். 9.
9. நாட்டில் தலித் மற்றும் பழங்குடியின வாக்குகளை பா.ஜனதா கட்சி ஒட்டுமொத்த அள்ளுவதற்கு முர்முவை ஜனாதிபதியாக முன்நிறுத்துவது பிரதமர் மோடியின் மற்றொரு ராஜதந்திர நடவடிக்கையாகும்.
10. ஓருவேளை முர்மு ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், ஒடிசா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 2-வது குடியரசு தலைவர் ஆவார். இதற்கு முன், வி.வி.கிரி ஒடிசாமாநிலத்தில் இருந்து ேதர்வு செய்யப்பட்டு இருந்தார்.