
தமிழக விவசாயிகளின் துயர்துடைக்க இனி அரசை நம்பாமல் பொதுமக்களே உதவ முன்வர வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு தமிழகத்திற்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை வறட்சி நிவாரணமாக அறிவித்தது. ஆனால் இந்ததத் தொகை போதாதது என்று கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை தென்னிந்திய நடிகர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது வறட்சி நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும், பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டக்களத்தில் இருந்து செய்தியாளர்களை விஷால் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "விவசாயிகளின் துயர் துடைக்க இனி அரசை நம்ப வேண்டாம். சினிமா பார்க்க செலவிடப்படும் பணத்தில் சிறு தொகையை விவசாயிகளுக்காக செலவிடுவோம்.." இவ்வாறு அவர் கூறினார்.