
உத்தரப்பிரதேச மாநிலத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உயிருக்கு போராடும் ஒரு பெண்ணுடன், 3 போலீசார் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லகாபாத் - லக்னோ இடையே செல்லும் கங்கா கோமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 45 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் பயணம் செய்ததாக தெரிகிறது. முன் விரோதம் காரணமாக அந்த பெண்மணியிடம் சிலர் சில்மிஷம் செய்து அசிட் குடிக்க வைத்துள்ளனர்.
பின்னர், எதிர்த்து போராடிய அந்த பெண், லக்னோ ரயில் நிலையத்தில் இறங்கி , போலீசில் புகார் அளித்தார் . இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு போடப்பட்டு, அந்த பெண்மணியை மன்னர் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
அப்போது காவல் பணியில் இருந்த 3 காவல் துறையினர் , அம்மருத்துவமனைக்குள் உயிருக்கு போராடும் அந்த பெண்ணின் கண் முன்னே செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இதனை தொடர்ந்து அந்த 3 போலிசாரையும் சஸ்பென்ட் செய்துள்ளனர் .