கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் சொத்து எவ்வளவு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Dec 16, 2017, 08:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் சொத்து எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Do you know Kohlis wife Anushka Sharmas property

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை மணந்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. தனது கணவர் கோலியுடன் ரூ.34 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஊதியம்

இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு மொத்தம் ரூ.220 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக ரூ.10 கோடி வாங்குகிறார். விளம்பர படங்களில் நடிக்க ரூ.4 கோடி கேட்கிறார்.

என்னென்ன சொத்து?

நடிகை அனுஷ்கா சர்மா தனது சேமிப்பில் ரூ.36 கோடி வைத்து இருக்கிறார். ரூ.5 கோடியில் பி.எம்.டபுள்யு,ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் ரகங்களில் 4 வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளன. கடைசி 3 வருடத்தில் இவரது சொத்து மதிப்பு 80 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. அடுத்த 3 வருடங்களில் மேலும் 30 சதவீதம் உயரும் என்று கணக்கிட்டு உள்ளனர்.

வர்த்தகம், முதலீடு

திரைப்படங்களில் சம்பாதிக்கும் பணத்தை  அனுஷ்கா சர்மா, புதிய வீடுகளில் முதலீடு செய்கிறார். 2012-ல் ரூ.10 கோடிக்கு மும்பையில் 3 வீடுகள் வாங்கி விலை ஏறியதும் அவற்றை விற்று லாபம் பார்த்துள்ளார். நாகரீக உடைகள் தயாரிப்பு நிறுனத்திலும் அனுஷ்கா பங்குதாரராகவும் இருக்கிறார்.

சொகுசு வீடு

அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் ஆடம்பர சொகுசு வீட்டில் குடியேற உள்ளனர். இந்த வீடு மும்பை ஒர்லி பகுதியில் 70 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 7 ஆயிரத்து 171 சதுர அடி பரப்பளவில் உள்ளது. விராட் கோலி கடந்த ஆண்டு ரூ.34 கோடிக்கு இதை வாங்கினார்.

இந்த வீட்டில் இருந்தபடியே கடல் அழகை ரசிக்கலாம். இதே அடுக்கு மாடி குடியிருப்பில்தான் கிரிக்கெட் வீரர்யுவராஜ் சிங்கும் மனைவி ஹேசல் கீச்சுடன் வசிக்கிறார். இந்த குடியிருப்பு வளாகத்தில் நீச்சல் குளம்,டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் மைதானம், குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

அனுஷ்கா சர்மா-விராட்கோலி குடியேற உள்ள வீட்டின் சொகுசு அறை ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!