Viral: மனைவிக்காக 7 கோடி செலவு செய்து கோவிலை கட்டிய கணவர் - எல்லாம் எதற்கு தெரியுமா.? இதுக்கு தான்.!!

By Raghupati R  |  First Published Mar 3, 2023, 7:38 PM IST

மனைவியின் ஆசைக்காக கணவர் ஒருவர் 7 கோடி மதிப்பில் கோவில் ஒன்றை காட்டியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.


ராஜஸ்தானில் மனைவியின் ஆசைக்காக கணவர் ஒருவர் ரூ.7 கோடியில் கோவில் கட்டிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலர் தினமென்றால் காதல் ஜோடியோ, புதுமணத் தம்பதியோ, வயதான தம்பதிகளோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பரிசுகள் வழங்குவது இயல்பு. இதில் சில ஆடம்பரமான மற்றும் சில விலையுயர்ந்த பரிசுகளும் அடங்கும். தற்போது அப்படி ஒரு வித்தியாசமான காதல் ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

கணவன் மனைவிக்காக 7 கோடியில் கோவில் கட்டிய கதை தான் இது. இந்த கோவிலின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கோவிலை கட்டியவர் யார் என்றால், கெத்ரவாசி லெங்கா. இவர் மனைவி பைஜந்திக்காக இந்த கோவிலை கட்டியுள்ளார்.

இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

பைஜந்தி வைஷ்ணவி தேவியின் பக்தர் என்று கூறப்படுகிறது. இந்த ஜோடி திருமணமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கேத்ரவாசி தனது மனைவிக்காக 7 கோடி ரூபாய் செலவில் வைஷ்ணவி தேவிக்கு கோவில் கட்டியுள்ளார். அவர் தனது மனைவியின் கனவை நிறைவேற்ற ஜாஜ்பூர் மாவட்டத்தில் இந்த கோவிலை கட்டியுள்ளார். பைஜந்தி லெங்கா சிறுவயதிலிருந்தே வைஷ்ணவி தேவியின் பக்தர்.

அவரது கணவர் கெத்ரவாசி லென்கா, மனைவி அம்மனை தினமும் வழிபட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற கோவிலை கட்டினார். 64 அடி உயர கோவிலை கட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 கைவினைஞர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களும் பணியமர்த்தப்பட்டனர். கோயிலின் உள்ளே இருக்கும் பிரதான அரங்கத்தின் நீளம் 85 அடி ஆகும். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ஆகிறது.

இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்

click me!