கணவராகவே இருந்தாலும் இதை செய்யாதீர்கள்; பிறகு அவ்வளவுதான்;

First Published Jun 7, 2018, 4:18 PM IST
Highlights
do not reveal this secret to your husband


முன்பெல்லாம் ஏதாவது பணத்தேவை என்றால், வங்கிக்கு நேரடியாக சென்று தான் பணம் எடுப்போம். ஆணால் இப்போதெல்லாம் ஏ.டி.எம் கார்டுகளை தான் உபயோகிக்கிறோம். ஆனால் இந்த ஏ.டி.எம் கார்டினால் ஒரு குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக ஒருவர் சூழ்நிலை காரணமாக தன்னுடைய ஏடிஎம் கார்டை, தன் குடும்ப நபர்களிடம் கொடுத்து பணம் எடுத்துவர சொல்வது என்பது இப்போது வழக்கமாகிவிட்டது.

ஆனால் அதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. பெங்களூரை சேர்ந்த வந்தனா மற்றும் ராஜேஷ் எனும் தம்பதியினரில், வந்தனா தன்னுடைய ஏ.டி.எம் கார்டை ராஜேஷிடம் கொடுத்து 25,000 ரூபாய் எடுத்து வரும்படி கூறி இருக்கிறார். ராஜேஷ் பணம் எடுக்க முயன்ற போது பணம் வரவில்லை. ஆனால் வந்தனாவில் கணக்கில் இருந்து 25,000 ரூபாய் கழிந்திருக்கிறது.

இதனால் அவர்கள் வங்கி தரப்பை அனுகி இருக்கின்றனர். அவர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை. பதிலாக ஏ.டி.எம் கார்ட் ரகசிய எண்ணை வந்தனா தனது கணவரிடம் பகிர்ந்து கொண்டது விதி மீறல், என கூறி இருக்கின்றனர்.

அதன் பிறகு நீதி மன்றத்தில் முறையிட்ட போது சிசிடிவி காட்சிகள் ராஜேஷிற்கு சாதகமாக இருந்தாலும், விதி மீறல் எனும் காரணத்தை கூறி நீதி மன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே இனி உங்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்துமாறு, உங்கள் நெருங்கிய உறவுகளிடம் கூட கொடுக்க வேண்டாம். பிறகு இதே போல ஏதாவது சம்பவம் நேர்ந்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்காது.

click me!