பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்ய தயங்க கூடாது; ஐ.நா.வில் மத்திய அமைச்சர் சுஷ்மா வலியுறுத்தல்

Asianet News Tamil  
Published : Sep 24, 2017, 03:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்ய தயங்க கூடாது; ஐ.நா.வில் மத்திய அமைச்சர் சுஷ்மா வலியுறுத்தல்

சுருக்கம்

Do not hesitate to ban Pakistani militant Masood Azar Union Minister Sushma asserted in UN

பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்மசூத் அசாருக்கு தடைவிதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்தயங்கினால், சர்வதேச சமூகம் எப்படி தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொது அவையின் 72-வது ஆண்டுக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது-

இன்றைய சூழலில் உலகளவில் தீவிரவாதம்தான் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. அதற்கு தீர்வு காணவே ஐ.னா. முயற்சி செய்து வருகிறது. நாம் நமது எதிரியை முடிவு செய்து ஏற்றுக் கொள்ளாவிட்டால், எப்படி ஒன்றாக இணைந்து போராடுவது?.

நாம் தொடர்ந்து நல்ல தீவிரவாதிகள், மோசமான தீவிரவாதிகள் என பாகுபாடு பார்த்தால், எப்படி ஒன்றாக இணைந்து போரிட முடியும்.?. தீவிரவாதிகளை பட்டியலிட ஐ.நா. மறுத்தால், எப்படி இணைந்து போரிடுவது?.

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் கொண்டு வந்து தடை செய்ய வேண்டும் என்று இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்துடன் இருக்கும் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகிறது.

இந்த மதிப்பு மிக்க அவையில் நான் வேண்டுகோள் விடுப்பது எல்லாம், தீவிரவாதம் நம்மை தோற்கடித்துவிடும், மனஅழுத்தத்தை கொடுக்கும் என பார்க்காதீர்கள். கொடுமை என்பது கொடுமைதான்.தீவிரவாதம் மனிதநேயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு எந்தவிதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது.

இந்த ஆண்டுக்குள் சர்வதேச தீவிரவாதம் மீதான விரிவான ஒப்பந்தத்தின் மீது ஐ.நா. கையொப்பம் இட வேண்டும். தீவிரவாதத்தால் நாங்கள் நீண்டகாலமாக  பாதிக்கப்பட்டு வருகிறோம். தீவிரவாதம் குறித்து நாங்கள் குறிப்பிடும் போது, உலகின் மிகப்பெரிய சக்திபடைத்த நாடுகள் இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று கூறிவிட்டனர். இப்போது நன்றாக அறிந்து இருப்பார்கள். இப்போது கேள்வி என்பது, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது தான்?

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் காதி ஆடைகள் அணிந்து வருவது கட்டாயம்... அரசு அதிரடி உத்தரவு..!
மகாராஷ்டிராவின் துணை முதல்வராகும் பெண்மணி.. யார் இந்த சுனேத்ரா பவார்..?