
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதும் அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்த வேண்டும் என இந்தியா தரப்பில் பலமுறை பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டுள்ள போதும் அதை சற்றும் பொருட்படுத்தாத பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது.
அண்மையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதில் இந்திய பாதுகாப்புப் படை வீரர் பிஜேந்திர பகதூர் சிங் என்பவர் வீர மரணம் அடைந்தார். இதையடுத்து இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். எனினும் இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.