பெட்ரோல் பங்க்கை லீவு விட்டு சிரமத்தை கொடுக்காதீர்கள் - பெட்ரோலிய அமைச்சகம் சாடல்

 
Published : Apr 20, 2017, 09:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
பெட்ரோல் பங்க்கை லீவு விட்டு சிரமத்தை கொடுக்காதீர்கள் - பெட்ரோலிய அமைச்சகம் சாடல்

சுருக்கம்

Do not give up the leave of the petrol punk told the petroleum ministry

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களை மூடி மக்களுக்கு ஏன் சிரமத்தைக் கொடுக்கிறீர்கள், பிரதமர் மோடி மக்களைத்தான் எரிபொருளை சேமிக்கச் சொன்னார். உங்களை விடுமுறைவிட கூறவில்லை என பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடுமையாகச் சாடியுள்ளது.

பிரதமர் மோடி மான்கிபாத் நிகழ்ச்சியில் பேசும்போது, மக்கள் பெட்ரோல், டீசல் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்,வாரத்தில் ஒருநாள் எரிபொருளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 இதையடுத்து, இந்திய பெட்ரோலிய சங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு மே 14-ந்ேததி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை விடப்படும் என அறிவித்தனர்.

ஆனால், இதில் அனைத்து இந்திய பெட்ரோலிய நிலைய உரிமையாளர்கள் கூட்டமைப்பில் உள்ள 53,224 நிலையங்களில் 80 சதவீதம்பேர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் பங்கேற்கவில்லை.தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகத்தின் சில பகுதிகள், தெலங்கானா, மஹாராஷ்டிராவின் சில பகுதிகள், மும்பை ஆகியவை மட்டுமே இந்த விடுமுறையில் பங்கேற்கின்றன.

அதேசமயம், ஒரு சில பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் அதிகமான கமிஷன் தரக்கோரி இந்த விடுமுறையில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் பெட்ரோல் நிலையங்களை மூடும் விசயம் குறித்து பெட்ரோலிய அமைச்சகம் கடுமையாக சாடியுள்ளது. இது குறித்து பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

மான்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, மக்கள் பெட்ரோல், டீசல் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில், வாரத்தில் ஒருநாள் வாகனங்களை இயக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், பெட்ரோல் நிலையங்களை மூடுங்கள் என்று அவர் பெட்ரோல் நிலையங்கள் உரிமையாளர்களிடம் கூறவில்லை.

ெபட்ரோல் நிலைய உரிமையாளர்களின் இந்த செயலை பெட்ரோலியத்துறை அமைச்சகம் வரவேற்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. 20 சதவீதம் பேர் மட்டுமே இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் பங்கேற்கிறார்கள். பெரும்பாலான பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள்,அதாவது 22 மாநில பெட்ரோலிய நிலைய உரிமையாளர்கள்  இதை வரவேற்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையில் பெட்ரோல் நிலையங்களை மூடுவதால், மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படும். இதை புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு