
பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் நாட்டின் ஆக்கிரமிப்பாளர்கள், இளைஞர்கள் இவர்களை பின்பற்றாமல், மகாராணா பிரதாப்சிங்கை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத் அறிவுரை வழங்கினார்.
இந்திய மன்னர் மகாராணா பிரதாப் சிங்கின் 437-வது பிறந்தநாள் விழா லக்னோவில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் முதல்வர்ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “ மாகாராணா பிரதாப் சிங், குரு கோவிந்த் சிங், சத்திரபதி சிவாஜி ஆகியோரைத்தான் இளைஞர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் காட்டிய வழியை பின்பற்ற வேண்டும்.மகாராணாவின் சுயமரியாதை, அவரின் வலிமை ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.
மாறாக பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் படை எடுப்பாளிகள்,ஆக்கிரமிப்பாளர்கள். அவர்களை பின்பற்றக்கூடாது. இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் மாயமாகப் போகும்
வரலாற்றில் இடம் பிடிக்கமுடியாத, திறனில்லாத ஒரு சமூகம், நாட்டை பத்திரமாக வைக்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.