மோடிக்கு எதிராக திரும்பியதா ஆர்எஸ்எஸ்?.. உபி தோல்விக்கு இதுதான் காரணமா.? பாஜகவில் நடக்கும் உள்குத்து!

By Raghupati RFirst Published Jun 5, 2024, 9:04 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. 400க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தனிப்பெரும்பான்மையை பெற முடியாமல், என்டிஏ கூட்டணி ஆதரவை எதிர்பார்த்துள்ளது. தற்போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே நடக்கும் பிரச்சனைகள் வெளிச்சத்துக்கு வந்த்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது. 2024 லோக்சபா தேர்தல்: 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை அனைத்து ஏழு கட்டங்களில் நடந்தது.அங்கே பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன.

எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது. வழக்கம் போல அனைவரும் எதிர்பார்த்தது போல வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றார். இருப்பினும் வட இந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு கடந்த தேர்தல்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. மேலும் உத்தர பிரதேசம் போன்ற பாஜகவின் வேர் ஆழமாக உள்ள இடங்களில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு பல முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. 

Latest Videos

எந்த ராமர் கோவில் வந்தால் வெற்றி உறுதியாகும் என்று நினைத்து நரேந்திர மோடியோ, பாஜகவோ செய்த எதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. குறிப்பாக அயோத்தி ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது. ஆணவத்தின் உச்சமாக ஸ்மிருதி இரானி பேசிய பேச்சு அவர்களுக்கே ஆப்பாக மாறி உள்ளது என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். ராகுல் காந்திக்கு எதிரான ஆணவ பேச்சு மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசிய சில பேச்சுகளும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது. முக்கியமாக ஆர்எஸ்எஸ் இனி பாஜகவுக்கு தேவையில்லை. அவர்கள் உதவியால் பாஜக வளர வேண்டிய அவசியம் இல்லை. கடந்த இரண்டு முறை மெஜாரிட்டியாக வந்த பாஜக பல்வேறு சிக்கல்களை உள்ளே அனுபவித்து உள்ளது என்று கூறலாம். கடந்த காலங்களை போல தன்னிச்சையாக முடிவெடுத்த நரேந்திர மோடி, இனி சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் போன்ற பல தலைவர்களை கலந்தாலோசித்து எடுக்க வேண்டிய நிலை இனி வரும்.

மோடி என்ற பிம்பம், மோடி கியாரண்டி போன்றவைகளை முழுமையாக மக்கள் ஏற்கவில்லை என்று தேர்தல் முடிவுகள் எடுத்துரைக்கிறது. உபியில் 50 சதவீத வெற்றியை கூட பாஜக பெறவில்லை. மம்தா பானர்ஜி மோடியை ராஜினாமா செய்ய சொன்னதுக்கு காரணம் இதுவாக இருக்கலாம். பாஜகவுக்கு தார்மீக தோல்வி என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிக்கும். இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்கு அளித்துள்ளார்கள். ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, ஒடிசா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிச்சயம் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

9 முறை அதிமுக தோல்வி.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தொண்டர்கள்.! EPS-க்கு அதிர்ச்சி கொடுத்த கே.சி பழனிச்சாமி

click me!