Rahul Gandhi Dog Biscuit row: தொண்டருக்கு நாய் பிஸ்கட் கொடுத்த ராகுல்? - வீடியோ வெளியிட்டு புகார் கூறும் பாஜக!

By Ansgar R  |  First Published Feb 6, 2024, 3:21 PM IST

Rahul Gandhi Bharat jodo nyay yatra : வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை ஒன்றை துவங்கியுள்ளார். 


வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தளையொட்டி போட்டியிடும் அனைத்து கட்சியினரும் மக்களை நேரில் சந்தித்து பல விஷயங்களை உரையாடி வருகின்றனர். அந்த வகையில் பாரத் ஜோடோ நியா யாத்திரையை தற்பொழுது ராகுல் காந்தி அவர்களால் துவங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை மணிபூரில் துவங்கிய நிலையில் அது மும்பையில் முடிவடையவுள்ளது. 

இந்நிலையில் இந்த யாத்திரையின்போது அங்கு குழுமியிருந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு நாய் பிஸ்கட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கொடுத்ததாக பரபரப்பு புகார் ஒன்றை பாஜக முன் வைத்துள்ளது. இது குறித்து வெளியான வீடியோ ஒன்றும் வைரலாகி தற்பொழுது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

Tap to resize

Latest Videos

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ரூ.10,000 அபராதம்: நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

மணிப்பூரில் தொடங்குகின்ற ராகுல் காந்தியின் இந்த யாத்திரையானது எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி மும்பையில் முடிவடைகிறது. மொத்தம் 66 நாட்களில் சுமார் 6700 கிலோ மீட்டர் தொலைவை ராகுல் காந்தி இந்த யாத்திரையில் கிடக்க உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அவர் இதே போல பாரத் ஜோடா யாத்திரையை மேற்கொண்டார். 

ஆனால் அது அவர் முற்றிலும் நடந்து சென்ற ஒரு யாத்திரை ஆகும், ஆனால் இந்த யாத்திரையில் அவர் சில பகுதிகளில் நடந்தும் பல இடங்களில் வாகனங்களில் சென்றும் கடக்கவிருக்கிறார்.. மேலும் ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் அவருடைய கார்கள் கண்ணாடி உடைந்தது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது உள்ளிட்ட சர்ச்சைகள் ஏற்கனவே நிகழ்ந்து வரும் நேரத்தில் தற்போது பாஜகவை சேர்த்த அமித் மால்வியா என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டு ராகுல் காந்தி ஒரு புதிய சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பதை பற்றி கூறியுள்ளார். 

ராகுல் காந்தியின் இந்த யாத்திரை ஆனது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது மேலும் ராஞ்சியில் நடைபெற்ற அந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி தன்னுடைய காரின் மேல் புறத்தில் அமர்ந்திருந்தார். அவர் அருகே ஒரு சிறு நாய் ஒன்றும் இருந்தது, யாத்திரையின் போது அந்த நாய்க்கு அவ்வப்போது ராகுல் காந்தி பிஸ்கட்டுகளை வழங்கி வந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.

अभी कुछ दिन पहले कांग्रेस अध्यक्ष खड़गे जी ने पार्टी के बूथ एजेंटों की तुलना कुत्तों से की और यहाँ राहुल गांधी अपनी यात्रा में एक कुत्ते को बिस्किट खिला रहे हैं और जब कुत्ते ने नहीं खाया तो वही बिस्किट उन्होंने अपने कार्यकर्ता को दे दिया।

जिस पार्टी का अध्यक्ष और युवराज अपने… pic.twitter.com/70Mn2TEHrx

— Amit Malviya (@amitmalviya)

ஆனால் தற்பொழுது பாஜகவின் ஐடி வின் பொறுப்பாளர் வெளியிட்ட பதிவுப்படி "சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் தனது கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாயுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார், இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இப்பொழுது ராகுல் காந்தி தனது தொண்டர் ஒருவருக்கு நாய் பிஸ்கட்டை வழங்கி உள்ளார். 

அந்த பிஸ்கட்டை தனது நாய் சாப்பிட மறுத்த நிலையில் அதனை அங்கு இருந்த தொண்டருக்கு கொடுத்துள்ளதாக அவர் கூறினார். இப்படி கட்சியின் தலைவர் மட்டும் பட்டத்து இளவரசர் தங்கள் கட்சியினரை நாய் போல் நடத்தினால் கட்சி விரைவில் மாயமாகிவிடும் என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு பதிவு: உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தின் அம்சங்கள் என்ன?

click me!