
இன்டாகிராமில் “சக்கைபோடு போடும்” மழலை கேட்க மறந்துடாதீங்க…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் “தல” மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா தோனி 2-வது மலையாளப் பாடலை பாடி அனைவரின் மனதையும் மயக்கியுள்ளார்.
2 வயதாகும் ஜிவா தோனி தனது மழலை மொழியால், இந்த முறை கடவுள் விஷ்னுவின் பாடலான “கனி காணும் நேரம் கமலனதரனட்டே” என்ற பாடலை தேன்போல இனிமையாக பாடி அசத்தியுள்ளார்.
இந்த பாடலை உண்மையில் பாடகி சித்ரா பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிவா தோனி பெயரில் இருக்கும் இன்ஸ்டாகிராமில் தோனியின் மகள் பாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அழகாகன மழலை மொழியில் பாடத் தொடங்கும் ஜிவாதோனிக்கு முடிக்கும் போது லேசாக இருமல் வந்துவிடுகிறது. இந்த வீடியோ வெளயிடப்பட்டு இதுவரை 1.39 லட்சம் பேர் பார்்த்துவிட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் இதேபோல, மலையாளப்படமான அத்வைதத்தில் வரும் “அம்பலப்புழா” பாடலை பாடி இருந்தார். இந்த வீடியோ வெளியிடப்பட்டு 4.31 லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. இதையடுத்து, வரும் ஜனவரி மாதம் ஆழப்புழா மாவட்டம், அம்பலப்புழாவில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் நடக்கும் விழாவில் பாட தோனியின் மகள் ஜிவா தோனி அழைக்கப்பட்டுள்ளார்.
ஜிவாதோனியின் அத்தை ஷீலா அவருக்கு மலையாளம் கற்றுக்கொடுப்பதால், ஜிவாதோனி மலையாளத்தின் “ழா” உச்சரிப்பை மிகச்சரியாக உச்சரிக்கிறார்.
ஜிவா தோனிக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் பாலோவர்ஸ்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.