
டெல்லியில் கிரிக்கெட் வீர்ர் தோனி தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டதைப் பயன்படுத்தி அவரது மூன்று விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இறுதிப் போட்டிக்குச் செல்லும் அணியை தேர்வு செய்வதற்கான அரையிறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெறவிருந்தது. இதில் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணியும், பெங்கால் அணியும் மோதவிருந்தன.
இதற்கிடையே தோனி மற்றும் அவரது சக வீர்ர்கள் தங்கியிருந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அரையிறுதிப் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டதைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தோனியின் அறைக்குள் புகுந்து அவர் பயன்படுத்தி வந்த விலை உயர்ந்த 3 செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக தோனி அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.