
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில்பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட திரிவேந்திர சிங் ராவத் மாநிலத்தின் 9-வது முதல் அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
இவருடன் சேர்ந்து 9 எம்.எல்.ஏ.க்கள்அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்புவிழாவில் பிரதமர்நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா வெற்றி
உத்தரகாண்டில் நடந்த 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில்பாரதிய ஜனதா கட்சி 57 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்தகாங்கிரசால் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
கடந்த 16 ஆண்டுகாலஉத்தரகாண்ட் வரலாற்றில், தனிக்கட்சி ஒன்று அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அமைப்பது இதுவே முதன் முறையாகும்.
முதல்வர் அறிவிப்பு
இதையடுத்து முதல்வராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஆர்வலரும், முன்னாள் மாநில பா.ஜனதா தலைவருமானதிரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் ராவத் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நேற்றுமுன்தின் ஆளுநர் கிருஷ்ண காந்த் பாலைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
57 வயதான திரிவேந்திர சிங் ராவத், டோய்வாலாதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹிரா சிங் பிசித்தைஎதிர்த்து போட்டியிட்டு, 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பதவி ஏற்பு
அதைத்தொடர்ந்து நேற்று தலைநகர் டெஹராடூனில்பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.திரிவேந்திர சிங் ராவத்துக்கு முதல்வராக ஆளுநர் கே.கே.பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் 9 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் அமைச்சர்களாகவும் 2 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
9 அமைச்சர்கள்
சத்பால் மகராஜ், பிரகாஷ் பந்த்,ஹரக் சிங் ராவத், யாஷ்பால்ஆர்யா, சுபோத் உனியால், மதன் கவுசிக், அரவிந்த்பாண்டே ஆகியோர் கேபினட்அமைச்சர்களாகவும், தான் சிங் ராவத், ரேகா ஆர்யா இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
முன்னாள் காங். எம்.எல்.ஏ.க்கள்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த 5 சுபோத் உனியால், ஹராக் சிங் ராவத்,யாஷ்பால் ஆர்யா, ரேகாஆர்யா, சத்பால் மஹாராஜ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத்துடன் சண்டையிட்டு பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,உமா பாரதி, ஜெகத் பிரகாஷ்நட்டா, உமா பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி வாழ்த்து...
டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், “ உத்தரகாண்ட்முதல்வராக பதவி ஏற்கும்திரிவேந்திர சிங் ராவத்துக்கு எனது வாழ்த்துக்கள். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ்வர் கடினமாக உழைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். மாநில மக்களின் அளப்பரியா ஆதரவால் புதிய அரசு பொறுப்பேற்கிறது. சிறப்பான வளர்ச்சி பெறும்'' எனத் தெரிவித்தார்