தாராவியில் தாறுமாறாக உருவெடுக்கும் கொரோனா... 60 பேருக்கு தொற்று உறுதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 15, 2020, 7:38 PM IST
Highlights
குறிப்பாக உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 
ஆசியாவில் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றுடன் முடிந்த ஊரடங்கு உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.


இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் அம்மாநிலத்தின் தலைநகரான மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. தற்போது 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளது. 


குறிப்பாக உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூட்டமாக வசிக்கும் பகுதி என்பதால் தாராவியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. 


அதுமட்டுமில்லாமல், தாராவியை பொறுத்தவரை கழிப்பிட பிரச்சனை மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஒரு கழிப்பறையை சுமார் 500க்கும் மேற்பட்டோர் உபயோகிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று தாராவி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 
 
click me!