Tirumala Tirupati : திருப்பதியில் திரண்ட பக்தர்கள்..பல மணி நேரம் காத்திருப்பு..‘திடீர்’ போராட்டம்..

By Raghupati RFirst Published Jan 14, 2022, 1:29 PM IST
Highlights

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

வைகுண்ட ஏகாதசி தினம் அன்று வைஷ்ணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாட்டில் உள்ள வைஷ்ணவ ஆலயங்களில் பக்தர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறந்தவுடன் முதலில் உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்க வாசலில் எழுந்தருளினார்.  காலை 6 மணி முதல் 300 ரூபாய் தரிசனம் டிக்கட்டுகள், இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் ஆகியோர் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 

 

இந்த பத்து நாட்களும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கிடைப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆறு லட்சம் லட்டுகள் எப்போதும் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும் 10 நாட்களும் ஒவ்வொரு நாளும் 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கும் வகையிலான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திருப்பதி மலையில் உள்ள அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு தொடர்ந்து இலவச உணவு கிடைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

நாட்டில் மீண்டும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை உடன் கொண்டு வரும் பக்தர்கள்,அல்லது முப்பத்தி ஆறு மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட பரிசோதனையில் காரோன நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்று உடன் கொண்டு வரும் பக்தர்கள் ஆகியோரை மட்டுமே திருப்பதி மலைக்கு செல்ல தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னரே ஏழுமலையானை தரிசிக்க முடியும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் பல்லாயிரம் பேர் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அதனால் மண்டபத்தில் விஐபி தரிசனத்தில் வந்தவர்கள் பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டனர். 

 

Devotees protested at Sri Temple on in , alleged that due to VIPs, they were kept locked in hall for many hours, kids were crying for hunger, raised slogans of down-down against and sat on a dharna. pic.twitter.com/1rMuNCAAH4

— Surya Reddy (@jsuryareddy67)

இதில் குழந்தைகள் உணவு இல்லாததால் பட்டினியால் கதறினர். இதனால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் செய்த பக்தர்களை போலீசார் பிடித்து அழைத்துச் சென்று, சிறிது நேரம் காவலில் வைத்தனர். பக்தர்கள் சிலர் காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனை அங்கிருந்தோர் சிலர் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

click me!