புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தான் கலந்துகொள்ள உள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தான் கலந்துகொள்ள உள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி அழைப்பு விடுத்தது உண்மைதான். ஆனால் இது அவரது தனிப்பட்ட திட்டம் அல்ல, நாட்டிற்கானது. புதிய பாராளுமன்ற கட்டிடம் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. அது நாட்டுக்கு சொந்தமானது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா... எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன? இதோ முழு விவரம்!!
பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அலுவலகம் அல்ல. முன்னாள் பிரதமர் என்ற வகையில், நாட்டின் குடிமகனாக நாடாளுமன்ற கட்டிடத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்ப்பதற்கு எனக்கு பல காரணங்கள் உள்ளன. எனினும், நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை அரசியலாக்க நான் விரும்பவில்லை.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சர்ச்சை.. காங்கிரஸ் எதிர்ப்புக்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்ன?
நான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அரசியலமைப்புச் சட்டத்தில் நான் அங்கு கடமையைச் செய்துள்ளேன், இன்னும் உறுப்பினராக இருக்கிறேன். அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாக்க நான் உழைத்துள்ளேன். எனவே அரசியல் சாசன விவகாரத்தில் அரசியல் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.