பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட தமிழக வீரர் அபிநந்தனின் முழு விவரங்கள்!

By sathish kFirst Published Feb 27, 2019, 5:42 PM IST
Highlights

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது என இந்திய வெளியுறவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல்  நடத்தியதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்திய  எல்லைக்குள்  எல்லைக்குள் நுழைந்த எப்-16 ரக விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்ததால் பதிலடி கொடுக்க முடியாமல் திரும்பிச் சென்றது.  

இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிநந்தன் திரும்ப வராததை இந்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவர் இருப்பதுபோல வீடியோவும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

கேரளாவை பூர்விகமாக கொண்ட அபிநந்தன் சென்னை சேலையூரை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தாம்பரத்தில் தனது பயிற்சியை முடித்த அவர், கடந்த 2004 கமிஷனில் உள்ள அவர் விமான படையில் பைலட்டாக பணிபுரிந்துள்ளார்.

பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டதாக கூறப்படும் இவரது நிலை தற்போது வரை தெரியாததால் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!