பாகிஸ்தானுக்கு சங்கு ஊதிய சீனா..! மாஸ் காட்டும் இந்தியா..!! அடுத்த அதிரடி ட்விஸ்ட் இதோ..!

By ezhil mozhiFirst Published Feb 27, 2019, 5:02 PM IST
Highlights

அடிமேல் அடி வாங்கி பாகிஸ்தான் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் பாகிஸ்தான் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

அடிமேல் அடி வாங்கி பாகிஸ்தான் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் பாகிஸ்தான் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

எப்படி தாக்கினாலும், இந்தியாகூட மோத முடியவில்லை என்பதை சொல்லாமல் உணர வைத்து உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பாக் பிரதமர் இன்று மாலை உரை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், எப்போதும் சீனாவின் நிலைப்பாடு  பாக் ஆதரவு தெரிவிக்கும். இந்தியா மீது ஒரு தனிப்பட்ட கவனமும் உண்டு. ஆனால் பயங்கர வாதத்திற்கு எதிராக உலக நாடுகள் தற்போது இந்தியாவிற்கு பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதன் படி, சீனா இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளது. சீனாவின் வூஜென் நகரில் நடந்த முத்தரப்பு மாநாட்டில், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா, சீனா, ரஷ்யா கூட்டறிக்கை வெளியீட்டுள்ளனர். அந்த அறிக்கையில் நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சனையை தீர்க்க தீவிரவாதத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் அரசுகளின் நடவடிக்கை முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மறைமுகமாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது சீனா. உலகமே இந்தியாவை உற்று நோக்கி வரும் இந்த சமயத்தில் சீனாவும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து, பாகிஸ்தானை கழட்டி விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!