ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் வெங்கையா...

 
Published : Oct 21, 2017, 07:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் வெங்கையா...

சுருக்கம்

Deputy Chief Minister Venkaiah Naidu returned home after being admitted to AIIMS hospital due to ill health.

உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வீடு திரும்பினார்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு திடீரென நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கூடியதால் மருத்துவமனையில் வெங்கையா நாயுடு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. 

இதைதொடர்ந்து அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் சுருக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவர் மூன்று நாட்களுக்கு முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து அவரை யாரும் சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று வீடு திரும்பினார்.
 

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்