ரூபாய் நோட்டு தடை முடிவை எடுத்தது யார்??? - வெளிவந்த உண்மை

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ரூபாய் நோட்டு தடை முடிவை எடுத்தது யார்??? - வெளிவந்த உண்மை

சுருக்கம்

நாட்டில் உள்ள 130 கோடி மக்களையும் கடந்த 50 நாட்களும் கடும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கவைத்த ரூபாய் நோட்டு தடை முடிவு என்பதுரிசர்வ் வங்கியால் வெறும் 3 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மிகப்பெரிய பொருளாதார விளைவுகளை உண்டாக்கக் கூடிய இந்த முடிவை, போதுமான முன் ஏற்பாடுகள் இல்லாமல், ரிசர்வ் வங்கி எடுத்து, பிரதமர் மோடிக்கு சம்மதம் கொடுத்ததன் காரணமாகவே, மக்கள் கடந்த 50 நாட்களாக கடும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கினர்.

நாட்டில் 86 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை பிரதமர் மோடி நவம்பர் 8-ந்தேதி இரவு 8 மணிக்கு ெசல்லாது என அறிவித்தார். மாற்று ஏற்பாடாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவு அறிவிக்கப்பட்ட 50 நாட்களில் மக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு உள்ளாகினர். பணத்தட்டுப்பாடு தலைவிரித்தாடியது.

இந்நிலையில், ரூபாய் நோட்டு முடிவு என்பது எத்தனே பேர் கூடி முடிவு செய்யப்பட்டது?, எத்தனை மணிநேரத்தில் எடுக்கப்பட்டது?, முன் ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டது? என்பது குறித்து ‘புளூம்பெர்க் நியூஸ்’ எனும் இணையதளம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு செய்தது.

அந்த மனுவுக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

உயர்மதிப்பு கொண்ட ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ந்தேதி இரவு 8மணிக்கு அறிவித்தார். அந்த முடிவு அறிவிப்பதற்கு முன்பாக 3 மணிநேரத்துக்கு முன்புதான், அதாவது 8-ந்தேதி மாலை 5.30 மணிக்கு  இந்த முடிவை ரிசர்வ் வங்கி உயர்மட்டக்குழு எடுத்தது. ஆனால், இந்த முடிவுக்கு எத்தனை உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தார்கள் என்ற தகவலை தெரிவிக்க இயலாது.

இந்த உயர் மட்டக்குழுவில் ரிசர்வ் கவர்னர் உர்ஜித்படேல், துணை கவர்னர்கள் ஆர். காந்தி, எஸ்.எஸ். முந்த்ரா, மற்றும் என்.எஸ்.விஸ்வநாதன், முக்கியநபர்கள், பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி கந்ததாஸ் உள்ளிட்டோரால் எடுக்கப்பட்டு, சம்மதம் தெரிவிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.

ஆனால், ரூபாய் நோட்டு தடை முடிவு எடுக்கப்படும் முன், முன் ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன?. என்பது குறித்தும், ரூ. 2 ஆயிரம், ரூ. 500 நோட்டுகள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு அச்சிடப்பட்டன, எத்தனை மணிநேரம் அச்சிடும் பணிகள் நடக்கின்றன? என்பது குறித்த விவரங்கள் ஏதும் இல்லை.

இது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கியின் முன்னாள்கவர்னர் உஷாத தாரோட் ஒருநாளேட்டுக்கு அளித்த பேட்டியில்,“ ரிசர்வ் வங்கி நிர்வாகம், ஊடகங்களிடம் நடந்த விஷயங்கள் குறித்தும், வாய்ப்புகள் குறித்தும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையையும் காப்பாற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு பேசுவது மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்கும்'' எனக்கூறியிருந்தார்.

ரூபாய் நோட்டு தடை வெளியாகி 50 நாட்கள் ஆன பின்பும், மக்கள் தங்கள்சேமிப்பை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் வங்கி, ஏ.டி.எம். வாசலில் நாள்தோறும் காத்துக்கிடக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

மனைவியின் அனுமதியின்றி மது அருந்தினால் சிறை..! மொத்தமாக மாறும் சட்ட திட்டம் அச்சத்தில் கணவர்கள்..
Mukesh Ambani : ஏவுகணை தாக்கினாலும் ஒன்றும் ஆகாது! முகேஷ் அம்பானியின் மிரட்டலான புல்லட் ப்ரூஃப் கார்கள் பட்டியல்!