
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும் எல்லையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், Bandipora மாவட்டம் Shahgund Hajin பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது தீவிரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு எல்லை பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், அப்பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.