டெல்லி புதிய துணைநிலை ஆளுநராக அனில் பைஜல் நியமனம்

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 11:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
டெல்லி புதிய துணைநிலை ஆளுநராக அனில் பைஜல் நியமனம்

சுருக்கம்

டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அனில் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியின் துணைநிலை ஆளுநராக இருந்த நஜீப் ஜங், கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனில் பைஜலை, துணைநிலை ஆளுநராக நியமிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது.

இதன்படி, அனில் பைஜலின் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அனில் பைஜல் நாளை டெல்லியின் புதிய ஆளுநராக பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

மேற்கு வங்கத்தில் வரலாறு படைத்த பாஜக.. மம்தாவின் கோட்டையைத் தகர்த்தது எப்படி?
Kerala Election: கேரளாவில் ஆட்சி மாற்றம்... 10 ஆண்டுக்கு பின் சிம்மாசனத்தில் அமரும் காங்கிரஸ்..!