
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 30 ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என அறிவக்கப்பட்டது.
இதனையடுத்து பழைய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கியுல் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் பொத மக்களை ரிசர்வ் வங்கி சுத்தவிட்டது.
ஆனாலும் இன்னும் சிலரிடம் பழைய ருபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய பணத்தை மாற்றத் தவறிய ஏராளமானோர் ரிசர்வ் வங்கியிடம் புகார்களைகுவித்து வருகின்றனர்.
இதனால் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இனி வங்கிகளில் செலுத்த முடியாத நிலையில்,
மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அளிக்க ரிசர்வ் வங்கிமுடிவு செய்துள்ளது.
இதனையடுத்து இரண்டாயிரம் ரூபாய் வரை பழைய பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக சில வங்கிகளில் சிறப்பு கவுண்டரை திறக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.