
இருந்தால், பினாமி தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணத்தை ஒழிக்க வருமான வரித்துறையினரும், அமலாக்கப்பிரிவினரும் முடுக்கி விடப்பட்டனர்.
இதில் கருப்புபணம் பதுக்கிய பலர் ஏழைகளின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து, அதை தங்கள் கணக்குக்கு மாற்றி பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும், அவ்வாறு அடுத்தவர்களின் கருப்புபணத்தை தங்களது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யதவர்கள் குறித்து பட்டியல் எடுத்து, அவர்கள் மீது பினாமி தடை சட்டத்தின் கீழ் வருமானவரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மும்பையில் இது போல் சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் கருப்புபணத்தை வேறு ஒருநபரின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து, அதை வெள்ளையாக்க முயற்சினர். இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த 20 தனிநபர்கள் மீது பினாமி தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பினாமி தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையின் எடுத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனைகிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 20 தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி பினாமி தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனங்களின் சொத்துக்கள், தனிநபர்களின் சொத்துக்களையும் முடக்கியுள்ளனர்.
ஆதலால், அடுத்தவர்களின் கருப்புபணத்தை தங்களது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்து, அதை வெள்ளையாக்க முயற்சித்தவர்கள் மீது பினாமி தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.