டெல்லி செங்கோட்டையில் வெடிக்‍காத நிலையில் வெடிகுண்டுகள்…. பாதுகாப்புபடையினர் அதிர்ச்சி..

 
Published : Feb 07, 2017, 08:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
டெல்லி செங்கோட்டையில் வெடிக்‍காத நிலையில் வெடிகுண்டுகள்…. பாதுகாப்புபடையினர் அதிர்ச்சி..

சுருக்கம்

டெல்லி செங்கோட்டையில் வெடிக்‍காத நிலையில் வெடிகுண்டுகள்…. பாதுகாப்புபடையினர் அதிர்ச்சி..

டெல்லி செங்கோட்டையில் கிணற்றில் இருந்து 5 பீரங்கி குண்டுகள், 44 வெடிக்காத தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை தேசிய பாதுகாப்புபடையினர் கைப்பற்றினர்.

டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான செங்கோட்டை அமைந்துள்ளது.

செங்கோட்டைக்குள் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பதிப்பக கட்டிடத்திற்கு முன் இருந்த கிணற்றை சுத்தம் செய்த போது அதில், வெடிக்காத தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய பெட்டிகள் கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து அந்த கிணற்றில் இருந்து 5 பீரங்கி குண்டுகள், 44 வெடிக்காத தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்களை தேசிய பாதுகாப்புபடையினர் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

இவை அரசுக்கு சொந்தமான ஆயுதங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"