காந்தி படம் இல்லாத ரூபாய் நோட்டு - வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி..!!

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 01:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
காந்தி படம் இல்லாத ரூபாய் நோட்டு - வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி..!!

சுருக்கம்

மத்தியப்பிரதேசத்தில் வங்கியில் வழங்கப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவம் இல்லாமல் இருந்தது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. 

மத்தியப்பிரதேசத்தில் Sheopur நகரில் பாரத ஸ்டேட் வங்கியில், விவசாயி ஒருவர் பணம்பெற்றபோது, அவருக்கு தந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மகாத்மாகாந்தியின் படம் காணப்படவில்லை.

இதனால், அந்த விவசாயி மட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில், இது அச்சடிக்கும் பொழுது நிகழ்ந்த தவறினால் ஏற்பட்டதுதான் என்றும், இவை போலி ரூபாய் நோட்டுக்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த பதில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. அரசின் கவனக்குறைவை அவர்கள் கடுமையாக குறை கூறினர்.

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!