ஆறு நாட்களில் 500 கோடி ரூபாய் டெபாசிட்...!!!

Asianet News Tamil  
Published : Dec 26, 2016, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஆறு நாட்களில் 500 கோடி ரூபாய் டெபாசிட்...!!!

சுருக்கம்

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந் தேதி  பிரதமர் மோடி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து 500 மற்றும் 1000 ரூபாய்  நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதி  வரை இந்த பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.

இந்நிலையில் ஜன்தன் வங்கி கணக்குகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருவதாக வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் சேலம் அற்றும் கடலுர் கூட்டுறவு வங்கிகளில் வரமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள முக்கியமான மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 6 நாட்களில் 500 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி நடத்திய தெரிய வந்தது.

நவம்பர் 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மட்டுமே 500 கோடி ரூபாய் வு பணம் டெபாசிட் ஆகியுள்ளது.

பாகல்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மட்டும் 162 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 8-ந்தேதி அறிவிப்பை தொடர்ந்து இந்த கூட்டுறவு வங்கியில்.25 லட்சம் ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை தனியார்கள் டெபாசிட் செய்து உள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்  அஜய்குமார் இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். இதேபோல முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள்  எஸ்.ஆர். பட்டீல், எச்.ஒய்.மெடி, பாரதிய .ஜனதா மேல்-சபை உறுப்பினர் ஸ்ரீனுமந்த் ஆகியோர் பாகல்கோட் கூட்டுறவு வங்கியில் இயக்குனர்களாக உள்ளனர்.

இதன் மூலம் அரசியல்வாதிகள் தங்களது கருப்பு பணத்தை மாற்ற கூட்டுறவு வங்கியை பயன்படுத்தி வந்தது வருமான வரித்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. 

PREV
click me!

Recommended Stories

Asha Bhosle passes away: 120000 ஹிட் பாடல்கள்.. பிரபல பின்னணி பாடகி ஆஷா போஷ்லே காலமானார்..!
சென்னை டூ பெங்களூரு வெறும் 2 மணி நேரம் தான்! மணிக்கு 220 கி.மீ வேகம்.. கெத்தாக களமிறங்கும் புதிய ரயில்!