"500, 1000 ரூபாய் வைத்திருந்தால் 4 ஆண்டு சிறையா?" - வங்கி ஊழியர் சங்கங்கள் கண்டனம்

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
"500, 1000 ரூபாய் வைத்திருந்தால் 4 ஆண்டு சிறையா?" - வங்கி ஊழியர் சங்கங்கள் கண்டனம்

சுருக்கம்

மார்ச் 31 க்கு பிறகு பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை தண்டனை என்ற மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பொது மக்களிடையே கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

வெங்கடாச்சலம் வங்கி ஊழியர் சங்கம்: 

 மத்திய அரசின் இந்த சட்டம் மக்களை மிரட்டும் செயல். மார்ச் 31 க்கு பிறகு அது வெறும் தாள் , அப்புறம் அதை கையில் வைத்திருந்தால் தண்டனை என்பது மக்களை மிரட்டும் செயல். வங்கி வாசலில் , ஏடிஎம் வாசலில் கோடிக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள் அவர்களை பற்றி அரசு கவலைப்படவில்லை, இது திசை திருப்பும் செயல் .

கருப்பு பணத்தை முடக்குவோம், கள்ளப்பணத்தை முடக்குவோம், தீவிரவாதத்தை ஒழிப்போம் மூன்று முக்கிய நோக்கங்களும் நிறைவேறவில்லை , மக்களுக்கு தொல்லை தான் அதிகமாகியுள்ளது.                 ரூ.15.5 லட்சம் கோடியை திரும்பப் பெற்று கள்ளப்பணத்தை ஒழிக்கப்போவதாக மோடி கூறினார். ஏறக்குறைய அனைத்து பணமும் திரும்ப வந்துவிட்டது. அப்போது கருப்ப பணம் எங்கே போச்சு. 

சிபி.ராமகிருஷ்ணன் .இந்தியன் வங்கி ஊழியர் சங்கம்

அவசர சட்டமே தேவை இல்லை , 500,1000 கள்ள நோட்டுகள் என்பது போல் மக்களை குற்றவாளிகள் போல் பார்ப்பது எப்படி , இதை கையில் வைத்திருந்தால் தண்டனை என்பது மக்களை மிரட்டும் செயல். மார்ச் 31 க்கு பிறகு அது வெறும் தாள் தான் .அப்படி இருக்கும் போது அதை வைத்திருந்தால் என்ன கிழித்தால் என்ன , இது மக்களை திசை திருப்பும் செயல். மத்திய அரசு  என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. 

எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் கோடிக்கணக்கான மக்களை வங்கி வாசலில் , ஏடிஎம் வாசலில் நிற்க வைத்துள்ளனர். இது தெரிந்தே அரசாங்கம் செய்யும் வேலை . லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கி கிடக்கிறது. 18 ஆயிரம் வழக்குகள் , 32 லட்சம் டெபிட் கார்டுகள் வழக்குகள் உள்ளது. 

சைபர் கிரைம் வழக்குகள் உள்ளது. சைபர் செக்யூரிட்டி இல்லாத நாட்டில் டிஜிட்டல் முறைக்கு மாறுங்கள் என்று எந்த அடிப்படியில் சொல்கிறார்கள், ரூபாயை வைத்திருப்பது குற்றம் என்பது மக்களை மிரட்டும் செயல்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இடஒதுக்கீடு என்பது உரிமையே தவிர, விதிமுறைகளைத் தளர்த்தும் கருவியல்ல..! நீதிமன்றம் அதிரடி..
LPG விலைக்கு வேட்டு வைத்த Cow Dung Revolution! இனி சாணம் இருந்தால் போதும்.. சமையல் இலவசம்?