"செல்லாத ரூபாய் வைத்து இருந்தால் 4 ஆண்டு ஜெயில்" - அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
"செல்லாத ரூபாய் வைத்து இருந்தால் 4 ஆண்டு ஜெயில்" - அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுருக்கம்

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை 10 எண்ணிக்கைக்கு அதிகமாகவோ, அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமாகவோ கையில் வைத்து இருந்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ, பெற்றாலோ அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபராதம், தண்டனை விதிக்க அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்ய இம்மாதம் 30-ந்ததேதி வரை அவகாசம் கொடுத்தது.

மத்தியஅரசின் காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், புதிய அவசரச் சட்டத்தை   மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஜனவரி மாதம் நடக்கும் கூட்டத்தொடரில் இதற்கான அவசரச்சட்டத்துக்கான ஒப்புதல் பெறப்படும்.

அதாவது, செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மார்ச் 31-ந்தேதிக்கு பின்,  10 நோட்டுகளுக்கு மேல் வைத்து இருந்தாலோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்தாலோ அல்லது பரிமாற்றம் செய்தாலோ அல்லது பெற்றாலோ அவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தனிநபர் ஒருவர் ரூ.500, ரூ.1000 நோட்டுகளா அதிகபட்சமாக 10 எண்ணிக்கையில் மட்டுமே வைத்திருக்க முடியும். அதன்மதிப்பு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.   

ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருப்பு என்ன வைத்து இருக்கிறார்களோ அந்த தொகையின் 5 மடங்கு தொகையை அபராதமாக விதிக்கப்படும்.

மேலும், இனி செல்லாத ரூபாய் நோட்டுகளை ஆய்வுப்பணிக்கோ, அல்லது பழைய ரூபாய் சேகரிப்பு என்ற ஆய்வுக்கோ மட்டமே கையில் வைத்து இருக்க அனுமதிக்கப்படுவார்கள். இதை மறைமுகமாக பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமாகும்.

அதேசமயம், ரிசர்வ் வங்கியின் கிளைகளில் செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்யவும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.ஆனால், டெபாசிட் செய்யப்படும்போது, அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு போதுமான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

வங்கிகளில் செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்யும் காலக்கெடுவும் வெள்ளிக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.

38 ஆண்டுகளுக்கு பின்......

இதேபோல கடந்த 1978ம் ஆண்டு, ரூ.1000, ரூ.5000, ரூ.10000 நோட்டுகளை செல்லாததாக அறிவிக்கும் போது அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ரிசர்வ் வங்கியில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை செல்லாத ரூபாய்களை மாற்றிக்கொள்வதில் மாற்றம் ஏதும் இருக்காது” என தெரிவிக்கின்றன

 

 

PREV
click me!

Recommended Stories

Ration Card: நீண்ட நாளா ரேஷன் வாங்கலையா? உங்க கார்டு கேன்சல் ஆகலாம், அரசின் அதிரடி முடிவு!
Petrol Price Cut: திடீரென சரிந்த பெட்ரோல் விலை! லிட்டருக்கு 5 ரூபாய் சரிவு.! இந்த பங்குகளுக்கு போனா டேங்க் ஃபுல் பண்ணலாம்.!