நாடாளுமன்றத் தாக்குதல்: உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரும் டெல்லி போலீசார்!

By Manikanda PrabuFirst Published Dec 29, 2023, 1:47 PM IST
Highlights

நாடாளுமன்றத் தாக்குதல்  விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி போலீசார் அனுமதி கோரியுள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மனோரஞ்சன், சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் தேவி, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேசமயம், நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் கொடுத்தது பாஜக எம்.பி. என்று தெரியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றபோதும் இதற்கு காரணம் வேலையின்மை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

Latest Videos

இதனிடையே, நாடாளுமன்றத்தில் ஊடுருவியவர்கள் தற்கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அதன் மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களை தீக்கிரையாக்க திட்டமிட்டதாகவூம், ஆனால், அவர்களது காயங்களைக் குறைக்க 'தீ தடுப்பு ஜெல்' வாங்க முடியாததால் அந்த முடிவை கைவிட்டதாகவும் லலித் ஜா தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா.. ஆர்த்தி' பாஸிற்கான முன்பதிவு தொடங்கியது.. விவரம் உள்ளே..

இந்த நிலையில், நாடாளுமன்றத் தாக்குதல்  விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

உண்மை கண்டறியும் சோதனை எனப்படும் பாலிகிராஃப் சோதனையின்போது, ஒரு நபரின் உடலியல் குறிகாட்டிகளான இரத்த அழுத்தம், துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவை எவ்வாறு செயல்படுகிறது என அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் போது பதிவு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு பதிலுக்கும், தடயவியல் விஞ்ஞானிகள், குற்றம் சாட்டப்பட்ட நபர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என பதிவி செய்து கொள்வர். இதில் திருப்தி இல்லை என்றால், போலீசார் நார்கோ சோதனையை நாடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நார்கோ சோதனையின்போது, ஒரு மருந்தை (சோடியம் பென்டோதல், ஸ்கோபொலமைன் மற்றும் சோடியம் அமிட்டல் போன்றவை) நரம்பு வழியாக செலுத்துவர். இது அதை அனுபவிக்கும் நபரை மயக்க மருந்தின் பல்வேறு நிலைகளில் நுழையச் செய்கிறது. அப்போது, ஹிப்னாடிக் நிலையில் சாதாரண நிலையில் பொதுவாக அவர் சொல்லாத தகவலை கூட சொல்ல வாய்ப்புள்ளது.

click me!