அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்காக நன்கொடை திருட்டும் பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் பங்கேற்றனர்.
பிரமாண்ட ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அயோத்தி தயாராகி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நிதிக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வகையில் காசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிச்சைக்காரர்களும் கோவில் கட்டுவதற்காக நன்கொடை அளித்துள்ளனர். பல பிச்சைக்காரர்கள் இணைந்து குழுவாக ரூ 4.5 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ ராம் மந்திர் தீர்த்த அறக்கட்டளைக்காக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஏற்பாடு செய்த நிதி பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் பங்கேற்றனர். இவர்களின் பங்களிப்பைப் பாராட்ம் விதமாக கும்பாபிஷேக விழாவிற்கும் இவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.
சமீபமத்திய கணக்கீடின்படி அறக்கட்டளைக்கு மாதந்தோறும் 1 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்து வந்தது. அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை தனது டெல்லி வங்கிக் கணக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்தும் நன்கொடைகளைப் பெறத் தொடங்கியது. தொடக்கமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஒரு பக்தர் 11,000 ரூபாயும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொருவர் 21,000 ரூபாயும் வழங்கினர்.
இந்த ஆண்டு பிப்ரவரி வரை, நாடு முழுவதிலும் இருந்து நன்கொடைகள் மூலம் அயோத்தியில் உள்ள அறக்கட்டளையின் மூன்று வங்கிக் கணக்குகளிலும் ரூ.3500 கோடி இருப்பு உள்ளதாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் சொல்கிறார்.
2024ஆம் ஆண்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுபானப் பணிக்கான பட்ஜெட் 18,000 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமானத் திட்டத்தை L&T நிறுவனம் எந்தச் செலவும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறது.
கோயிலுக்கான நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தில் காசி மற்றும் பிரயாக்ராஜ் பகுதிகளில் இருந்து பலர் பங்கேற்றனர். அயோத்தியில் உள்ள ராம்கோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அலுவலகத்திற்கு உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சமீபத்தில் சென்று பார்வையிட்டார்.
பிரதமர் மோடி டிசம்பர் 30-ம் தேதி அயோத்திக்கு செல்ல உள்ளார். தனது பயணத்தின் போது, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு பேரணியிலும் அவர் உரையாற்றுவார்.
ஆகஸ்ட் 5, 2020 அன்று பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். ஜனவரி 22, 2024 அன்று கோவிலில் ராமர் சிலை நிறுவும் விழா நடக்க உள்ளது. முன்னதாக, டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி அயோத்திக்குச் செல்ல உள்ளார். அங்கு புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயல் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். பிரம்மாண்டமான ஒரு பேரணியிலும் அவர் கலந்துகொள்கிறார்.