மீம் கிரியேட்டரோ..? மார்வல் ஸ்டைலில் விழிப்புணர்வு.. வைரலாகும் டெல்லி போலீஸ் ட்விட்டர் பதிவு...!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 17, 2022, 02:24 PM IST
மீம் கிரியேட்டரோ..? மார்வல் ஸ்டைலில் விழிப்புணர்வு.. வைரலாகும் டெல்லி போலீஸ் ட்விட்டர் பதிவு...!

சுருக்கம்

டெல்லியில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் போது விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.   

ஹாலிவுட் திரைப்பட சீரிஸ் மார்வல் உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக மார்வல் திரைப்படங்களுக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறகது. சமீபத்தில் மார்வல் தயாரிப்பில் வெளியான திரைப்படம், 'டாக்டர் ஸ்டிரேன்ஜ் இன் தி மல்டிவர்ஸ் ஆப் மேட்னஸ்.' வெளியான நாடுகள் அனைத்திலும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக இது உருவெடுத்து கலெக்‌ஷனில் பட்டையை கிளப்பி வருகிறது. 

இதன் காரணமாக டெல்லி போலீஸ் மார்வல் திரைப்படத்தை பயன்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தது. இதை அடுத்து டெல்லி போலீஸ் ட்விட்டரில் வெளியிட்ட விழிப்புணர்வு பதிவு வைரல் ஆகி வருகிறது. வைரல் ட்விட்டர் பதிவில் மதுபானம் கிலாஸ் ஒன்றில் ஊற்றப்படும் புகைப்படம் உள்ளது. அதில் ஸ்பைடர் மேன் திரைப்படத்தை குறிக்கும் 'Spider-Man: No Way Home', வாசகம் இடம்பெற்று இருக்கிறது. 

ஸ்பைடர் மேன் ஸ்டைலில் பதிவு:

வைரல் பதிவின் தலைப்பில் நீங்கள் வீட்டில் இருந்து வெகு தொலைவில் இருந்தால், மல்டிவர்ஸ் ஆப் மேட்னஸ்-இல் விழுந்து விடாதீர்கள், அப்புறம் உங்களுக்கு நோ வே ஹோம் தான் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பதிவானது மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்பதை குறிக்கிறது. 

டெல்லி போலீஸ் ட்விட்டர் அக்கவுண்டில், வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது. இதுவரை இந்த ட்விட்டர் பதிவை சுமார் 244 பேர் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் ரி-ட்விட் செய்துள்ளனர். முற்றிலும் வித்தியாசமான முறையில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும் டெல்லி போலீஸ் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

பலர் இந்த ட்விட்டர் பதிவை பகிர்ந்து இதனை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. டெல்லியில் மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. பலர் குடித்து விட்டு வாகனம் ஓட்டும் போது விபத்தில் சிக்கியதில் உயிரிழந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்
காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான்.. டிரம்புகாக வளைந்த ஷெரீப்..! மக்கள் கடும் எதிர்ப்பு..!