ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.. டெல்லி மெட்ரோ அறிவிப்பு..

By Ramya sFirst Published Dec 21, 2023, 10:05 AM IST
Highlights

இந்தர்லோக் ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு டெல்லி மெட்ரோ நிறுவனம் ரூ. 15 லட்சம் வழங்கவுள்ளது

சமீபத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் பயணியின் உறவினர்களுக்கு ₹15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மெட்ரோ இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், பெண்ணின் குழந்தைகளின் கல்வியையும் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. மெட்ரோ இரயில்வே (உரிமைகோரல் நடைமுறை) விதிகள், 2017ன் படி, இறந்தவரின் உறவினர்கள் ₹5 லட்சம் இழப்பீடு பெற உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த பெண்ணின் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவியாக, கூடுதலாக ₹10 லட்சம் வழங்கப்படும். குழந்தைகள் இருவரும் மைனர்கள் என்பதால், அந்த தொகையை வழங்குவதற்கான சட்ட வழிமுறைகளை வகுப்பதில் தற்போது டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

முன்னதாக, கடந்த 14-ம் தேதி, இந்தர்லோக் நிலையத்தில் டெல்லி மெட்ரோ ரயிலின் அடியில் 35 வயது பெண் ஒருவர் காயமடைந்து உயிரிழந்தார். மெட்ரோ ரயிலின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் புடவையின் ஒரு பகுதி ரயிலுக்கு இடையே சிக்கியதால், ரயிலின் அடியில் அப்பெண் சிக்கிக்கொண்டதால் பலத்த காயம் அடைந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.

அந்தப் பெண்ணின் உறவினரான விக்கி இதுகுறித்து பேசிய போது, மேற்கு டெல்லியில் உள்ள நங்லோயிலிருந்து மோகன் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது. அவர் இந்தர்லோக் மெட்ரோ ஸ்டேஷனை அடைந்து ரயிலை மாற்றிக் கொண்டிருந்தபோது, அவளது புடவை கதவில் மாட்டிக்கொண்டது. கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தாள். ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சனிக்கிழமை மாலை, அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள்” என்று அவர் கூறினார்.

அயோத்திக்கு நேரடி விமான சேவை.. டிசம்பர் 30 முதல் தொடக்கம் - விமான டிக்கெட் கட்டணம் எவ்வளவு?

click me!