கொரோனா பாதிப்பு பிறகு இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
7-ம் வகுப்பு பள்ளி மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு பிறகு இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சிக்மகளூருவில் உள்ள தாரதஹள்ளி ஆரம்பப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தவர் ஹத்தாத்(13). இவர் பழக்கம் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பள்ளி மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க;- 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சளி மற்றும் காய்ச்சல் சிரப்களை கொடுக்க கூடாது.. மத்திர அரசு தடை..
மகள் உயிரிழந்த செய்தியை அறிந்த பெற்றோர் உடலை பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். 7ம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.