டெல்லி மதுபான கொள்கை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு!

By Manikanda Prabu  |  First Published Apr 10, 2024, 10:58 AM IST

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார்


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது மற்றும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பியதற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் முறையிடவுள்ளனர்.

Loksabha Elections 2024 பிரதமர் மோடி இன்று வேலூரில் பிரசாரம்!

“அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்த அதே காரணங்களின் அடிப்படையில்தான் ஆம் ஆத்மி எம்.பி. சம்ஞ்சய் சிங்கின் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதேபோன்று, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் உச்ச நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் நாடினார். ஆனால், உடனடியாக அவர் தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஏனெனில், அதேநாளில் டெல்லி மதுபான வழக்கில் சிக்கியுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கவிதாவுக்கு நிவாரணம் அளிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், நெறிமுறையை மீற முடியாது என்று கூறியதுடன், விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கவிதாவிடம் கூறியது. இதனால், தனது மனுவை திரும்பப் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், 18 நாட்களுக்கு பிறகு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!