டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிரடி கைது… இதுதான் காரணம்!!

By Narendran SFirst Published May 30, 2022, 8:50 PM IST
Highlights

பணமோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

பணமோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் அமைச்சர் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் 2015-16 ஆம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக விசாரணை நிறுவனம் குற்றம் சாட்டியது. இதை அடுத்து ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் 2017ல் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. 2011-12ல் ரூ.11.78 கோடியும், 2015-16ல் ரூ.4.63 கோடியும் மோசடி செய்வதற்காக ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் உண்மையான வணிகம் இல்லாத நான்கு ஷெல் நிறுவனங்களை அமைத்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.

சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்க இயக்குனரகம் தனது விசாரணையைத் தொடங்கியது. இதை அடுத்து இன்று இந்த பணமோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனிடையே இந்த கைது, டெல்லி, யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே புதிய போரைத் தூண்டும் என, ஆம் ஆத்மி கட்சி, மம்தா பானர்ஜி, தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது எட்டு ஆண்டுகளாகப் பொய் வழக்கு தொடரப்பட்டு வருகிறது.

இது வரை அமலாக்க இயக்குநரகம் பலமுறை அழைத்தது. இடையில் பல ஆண்டுகளாக எதுவும் கிடைக்காததால் அமலாக்க இயக்குநரகம் அழைப்பை நிறுத்தியது. இமாச்சலத்தின் தேர்தல் பொறுப்பாளர் சத்யேந்தர் ஜெயின் என்பதால், இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டு இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் ஜெயின் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இமாச்சலில் பாஜக படுதோல்வி அடைகிறது. அதனால்தான் சத்யேந்தர் ஜெயின் இமாச்சலத்திற்கு செல்ல முடியாமல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு முற்றிலும் போலியானது என்பதால் இன்னும் சில நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

click me!