
முந்தைய ஆட்சியில் காகித அளவிலேயே இருந்த அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்றார். காங்கிரஸை தவிர்த்த வேறு கட்சி ஒன்று மத்தியில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது அதுவே முதன்முறை. அதே போல காங்கிரஸ் இது பல அடியாக அமைந்தது. காங்கிரஸுக்கும் இந்த சூழ்நிலை முதன் முறை. பிரதமர் மோடி தனது முதல் பதவிக் காலத்தில், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் என்ற பெரும் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இன்னும் பல எண்ணற்ற திட்டங்களையும் அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் பாஜக ஆட்சி அமைத்து 8 ஆண்டு நிறைவு கொண்டாட்ட பாடல் வெளியிடப்பட்டது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது. பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் இந்திய அரசியல் கலாச்சாரத்தை மாறியுள்ளார். எதுவும் நடத்தி முடிக்கப்படும் என்ற நேர்மறையான நிலை உருவாகியுள்ளது.
சேவை, நல்லாட்சி, ஏழை நலன், இதுவே மோடி அரசின் செயல்பாடு. மோடி அரசின் ஆன்மா. முன்பு இருந்த ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் காகித அளவிலேயே இருந்தன. ஆனால், தற்போதைய ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எட்டிவிடும் இலக்கில் தான் உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பிரதமர் மோடிக்கும் அவரது தலைமையிலான மத்திய அரசுக்கும் புகழாரம் சூட்டினார்.