
அனைத்து வகையான வங்கிகளுக்கும் அடுத்த மாதம் 8 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை கால்ண்டர் நிகழ்ச்சிகள் வார இறுதி நாட்களைத் தவிர மாறுப்பட்டு இருக்கும். இந்தியாவில் வங்கி விடுமுறைகள் Negotiable Instruments Act, Real-time gross settlement, Closing of bank accounts ஆகிய மூன்று வகைகளின் அடிப்படையில் முறைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட பட்டியலின் படி, ஜூன் மாதத்தில் வங்கிகள் எட்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், இரண்டு விடுமுறை நாட்கள் Negotiable Instruments Act-n கீழ் (Negotiable Instruments Act) பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 நாட்களில் 4 ஞாயிற்று கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் ஆகிய வார இறுதி விடுமுறைகள் ஆகும். ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.
வார இறுதி விடுமுறைகளை தவிர ஜூன் மாதத்தில் 2 வங்கி விடுமுறைகள் மட்டுமே உள்ளன. இருப்பினும், இந்த 2 நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படாது. எடுத்துக்காட்டாக வரும் ஜூன் 2ஆம் தேதி (வியாழக்கிழமை), மகாராணா பிரதாப் ஜெயந்தியை (Maharana Pratap Jayanti) முன்னிட்டு ஷில்லாங்கில் அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.
அதே போல வரும் ஜூன் 15-ஆம் தேதி புதன்கிழமை, ஒய்எம்ஏ தினம் / குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள் / ராஜ சங்கராந்தியை உள்ளிட்டவற்றை முன்னிட்டு மிசோரம் தலைநகரம் ஐசவ்ல், புவனேஷ்வர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். பிற பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது.
மேலும் படிக்க: செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருங்கள்… குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்!!