டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது ஜாமீன் கோரிக்கையை ஏற்று இந்த் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக சிறப்பு அனுமதி சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ஜூன் 2ஆம் தேதி மீண்டும் சிறை சென்றார். பின் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்று டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதி நீதி பிந்து முன்பு நடைபெற்றது. நேற்று இந்த வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைத்திருந்த நீதிபதி, இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், அமலாக்கத்துறை சார்பில் இந்த உத்தரவை அமல்படுத்த 48 மணிநேரம் இடைக்காலத் தடை கோரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அமலாக்கத்துறை கோரிய அவகாசத்தை அளிக்க மறுத்துவிட்டது. இதனால், வெள்ளிக்கிழமை ரூ.1 லட்சத்துக்கான ஜாமீன் பத்திரத்தை செலுத்திய பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியேறலாம்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலை ஆதரித்துப் பேசிய கேரளப் பெண்! மன்னிப்பு கேட்கச் சொல்லும் நெட்டிசன்கள்!