ஜவுளிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து... உடல் கருகி உயிரிழந்த 9 பேருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..!

By vinoth kumarFirst Published Dec 23, 2019, 6:45 PM IST
Highlights

டெல்லியில் கிராரி பகுதியில் உள்ள ஜவுளிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவரது குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியில் கிராரி பகுதியில் உள்ள ஜவுளிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவரது குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

டெல்லியின் கிராரி பகுதியில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென அனைத்து இடங்களிலும் பரவியது. கட்டிடம் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இரவில் தூக்கத்தில் இருந்த குடியிருப்பாளர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்கொண்டுவந்தனர். இந்த கொடூர விபத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 3 பேர் குழந்தைகள் அடங்கும். மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்பதோடு, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த 8-ம் தேதி டெல்லியின் அனஜ் மண்டி பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

click me!