New Delhi : டெல்லி NCRன் பல பகுதிகளில் நேற்று வியாழன் மற்றும் இன்று வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கும் இடைப்பட்ட இரவில் லேசான மழை பெய்தது. இது தேசத்தின் தலைநகரில் அதிகரித்த காற்று மாசுபாட்டிலிருந்து மக்கள் விடுபட மிகவும் தேவையான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வெளியான வீடியோக்களில் கர்தவ்யா பாதை மற்றும் டெல்லி-நொய்டா எல்லையில் இருந்து மிதமான தீவிர மழை பொழிவைக் காட்டியது. நகரின் மாசு நிலையைக் குறைக்க, 'செயற்கை மழை' என்ற யோசனையை செயல்படுத்த, டெல்லி அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில், தேசிய தலைநகரில் இயற்கையே மழையை கொடுத்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை, டெல்லியில் காற்று மாசுபாட்டை எதிர்த்து போராட 'செயற்கை மழை' உண்டாக்க அரசு முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான பேச்சுவார்த்தையும், சரியான நாட்களை தேர்வு செய்யும் கூட்டமும் நடைபெற்றது.
கத்தார் ராணுவ ரகசியத்தைக் கசியவிட்ட 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை; தடுத்து நிறுத்த முயலும் இந்தியா
இதற்கிடையில், டெல்லி அரசு மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அமைச்சர்களையும் களமிறக்கியுள்ளது. ஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, பல டெல்லி அமைச்சர்கள் நேற்று வியாழக்கிழமை பல்வேறு பகுதிகள் மற்றும் டெல்லியை அண்டை மாநிலங்களுடன் இணைக்கும் எல்லைகளை ஆய்வு செய்தனர்.
தற்போது, நகரின் காற்றின் தரம் 'கடுமையான பிளஸ்' வகைக்கு சரிந்த பிறகு, தேசிய தலைநகரில் தரப்படுத்தப்பட்ட பதில் செயல்திட்டத்தின் (GRAP) நிலை IV செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று 670 AQI இருந்தது, இது மிகவும் ஆபத்தானது என்று டெல்லி காற்று மாசு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இப்பொது உள்ள அந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பது, ஒரு நாளைக்கு சுமார் 10 சிகரெட்டுகள் புகைப்பது போன்றது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.